குழந்தை கவிதை
அன்பு, ஆக்கம் அ , ஆ வாம்,இயன்றதை ஈதல் இ, ஈ யாம்,
உண்மை, ஊக்கம் உ, ஊ வாம்,
எளிமை , ஏற்றம் எ, ஏ வாம்,
ஐம்புலன் ஒற்றுமை ஐ, ஒ வாம்,
ஓலைபுகழ் ஒவையார் ஓ, ஔ வாம்!
அ, ஆ பாடம் கற்றோமே...
இயன்றதை எளியோர்க்கு ஈவோமே...
உண்மை ஊக்கம் வளர்ப்போமே...
தீய எண்ணம் ஒழிப்போமே...
அனைவரும் ஒற்றுமை காப்போமே...
புவியில் வாகை கொள்வோமே...!!!
